ஓட்டப்பிடாரம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொலை!!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல சுப்பிரமணிய கிராமத்தில் கீழ தெருவை சேர்ந்த மாரியப்பன் இவரது மனைவி மாரியம்மாள் வயது 45 இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். மனைவியின் மீது நடத்தையில் சந்தேகப்பட்டு நேற்று மாலை அடித்துக் கொலை.
மாரியப்பன் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இரண்டு நாளுக்கு ஒருமுறை வீட்டுக்கு வரும் மாரியப்பன் நேற்று மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு மாலை 5 மணி அளவில் குடிபோதையில் மனைவியை அடித்து காலால் மிதித்ததில் ரத்த காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் சிகிச்சை பலனின்றி இரவு 9.30 மணி அளவில் இறந்து விட்டார். மாரியப்பன் குடிபோதையில் அடித்ததில் மனைவிக்கு பின் தலையில் ரத்த காயம் மற்றும் மார்பக எலும்பு உடைக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் மாரியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments