புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80க்கும் அதிகமான ஏழை மக்களுக்கு உதவிட கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம்!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80க்கும் அதிகமான ஏழை மக்களுக்கு உதவிட கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ' மிராக்கில்' திட்டம் துவக்கம்!

மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80க்கும் அதிகமான ஏழை மக்களுக்கு உதவிட 'மிராக்கில்' எனும் மருத்துவ திட்டத்தை கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்று நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் இனைந்து முன்னெடுத்துள்ளன. இந்த திட்டத்தின் கீழ், புற்றுநோயாளிகளின் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நிதியை ரோட்டரி அமைப்பும், இதற்கு தேவையான மருத்துவ சேவைகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையும் ஏற்கும். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்படி பட்ட சிறப்பு கொண்ட இந்த திட்டத்தின் துவக்கவிழா திங்கள் அன்று (26.6.23) ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அரங்கத்தில் நடைபெற்றது.  ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்று நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் P.குகன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் D.லட்சுமி நாராயணசுவாமி தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கம் சார்பில் Rtn. சுபாஷ் கோயங்கா மற்றும் குழுவினர், கோயம்புத்தூர் ஸ்மார்ட்சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn. அபர்ணா சுங்கு மற்றும் குழுவினர் பங்கேற்றனர். 

கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் திரட்டிய நிதியுடன் சர்வதேச ரோட்டரி அமைப்பின் நிதி உதவியையும் பெற்று மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 55 பேருக்கும்,  கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 34 பேருக்கும், மொத்தம் 89 நோயாளிககுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க ரூ.68 லட்சத்திற்கான நிதியை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நிர்வாகத்திடம் காசோலையாக ரோட்டரி அமைப்பினர்  வழங்கினர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து மேலும் டாக்டர் குகன் கூறுகையில் :- இன்று நமது நாட்டில் மார்பக புற்றுநோய் என்பது நகர பகுதிகளிலும் கர்பப்பை வாய் புற்றுநோய் என்பது கிராம பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது. தற்போது உள்ள மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்குவது மட்டுமில்லாமல் புற்றுநோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களை முழுமையாக குணப்படுத்தவும் கூட  முடியும். 

ஆனால் இது போன்ற தரமான மருத்துவ சிகிச்சையை ஏழை மக்கள் பெறுவது என்பது கடுமையான சவாலாக உள்ளது.  சில காரணங்களால் ஏழை மக்கள் பலரிடமும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் காப்பீட்டு திட்டமும் இருப்பதில்லை.  இதனால் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பலரும் தரமான சிகிச்சை கிடைக்காமல் இறந்து போகும் சூழல் உள்ளது. இந்நிலையில் ரோட்டரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 'மிராக்கில்'  எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளனர். இதன் மூலம் 89 புற்றுநோயாளிகளின் வாழ்க்கையில் அதிசயம் நிகழுமென எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியின் இறுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்று நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.

-சீனி, போத்தனூர்.

Comments