கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி.கல்வியியல் கல்லூரியில் 2005 ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!!


கோவை சரவணம்பட்டி பகுதியில், கல்வியியல், தொழில் நுட்பம்,நர்சிங் மற்றும் பிசியோ தெரபி, என பல்வேறு துறை சார்ந்த கல்லூரிகளை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பி.பி.ஜி.கல்வி குழுமம் நடத்தி வருகின்றது.

இந்நிலையில் பி.பி.ஜி.கல்வியியல் கல்லூரியில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பயன்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இதில்,நிர்வாக அறங்காவலர் அக்‌ஷய் தங்கவேலு முன்னிலை வகித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கல்வியியல் கல்லூரி முதல்வர் சித்ரா அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பி.பி.ஜி.கல்வியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் ஜெபக்கனி செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் பேசிய டாக்டர் தங்கவேலு வாழ்க்கையில் எவ்வளவு உயரங்களுக்கு சென்றாலும் கல்லூரி கால நினைவுகள் என்றுமே வசந்த காலங்கள் என குறிப்பிட்டு பேசிய அவர், இந்த கல்லூரி 2500 ஆசிரியர்களை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.

முன்னால் மாணவர்கள் தாங்கள் பயின்ற  கல்லூரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், மாறி வரும் கல்வி சூழலில் கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்களும் தங்களை அறிவாற்றலை புதுப்பித்து கொள்வது அவசியம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவ, மாணவிகள் என வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலும் இருந்தும் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments