பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலயத்திற்கு தொடர் ஜோதி ஓட்டத்தை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயம் அமைந்துள்ளது . பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்க தேவி ஆலய 67-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வீர பாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி சார்பாக கயத்தாறில் கட்டபொம்மன்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூக்கிலிடப்பட்ட மணி மண்டபத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு 39-ம் ஆண்டு ஜீவஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியது. முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த தொடர் ஜோதி ஓட்டம் கயத்தாறில் இருந்து பசுவந்தனை பாஞ்சை சிலோன் காலனி வழியாக பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயம் வந்து அடைந்தது .
இந்த தொடர் ஜோதி ஓட்டத்திற்கு பாஞ்சை சிலோன் காலனி ஊர் தலைவர் தேவதாஸ் முன்னிலையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா கருணாநிதி அவர்கள் சார்பில் 150 க்கு மேற்பட்ட வீரர்கள் மாற்றும் ஜோதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்கள் மற்றும் வீரர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெய லலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆசூர் காளிபாண்டியன் மற்றும் ம.தி.மு.க. சார்பில் மாநில திருமண குழு உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீர பாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி தலைவர் சதீஷ்குமார், செயலாளர் முத்தமிழ் செல்வம், இளைஞர் அணி பொருளாளர் செல்வ கட்டபொம்மு, துணைத்தலைவர் சந்தன மேகலிங்க ராஜ் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments