வீரபாண்டிய கட்டபொம்மனின் மெய்காப்பு படை தளபதிகள் நினைவு தினம்!!!!

 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே  சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் மெய்காப்பு படை தளபதிகளான பொட்டி பகடை, முத்தன் பகடை மற்றும் கந்தன் பகடையின் 223ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போரின்போது கட்டபொம்மனுக்கு துணையாகவும், மெய்காப்பு படை தளபதிகளாகவும் இருந்தவர்கள் பொட்டி பகடை, முத்தன் பகடை, கந்தன் பகடை ஆவர். இம்மூவரின் 223வது நினைவு தினம், நேற்று குறுக்குச்சாலையை அடுத்துள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 3 பேரின் படத்திற்கும் ஆதிதமிழர் கட்சி மாநில அமைப்பு செயலர் திலீபன், மாவட்ட செயலாளர் ஊர் காவலன்  மாநில பொதுசெயலாளர்   விஸ்வைக்குமார்     மாநில துணை பொது செயலாளர் வசந்தன்    ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் இராமூர்த்தி     மற்றும் மாவட்ட மாநாகர  ஒன்றிய பொருப்பாளர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த நிரவாகிகள், பெண்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர், 

-முனியசாமி.

Comments