ஓட்டப்பிடாரம் இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் சீமான் ஆவேசம்!!
தூத்துக்குடியில் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் புதூர் பாண்டியாபுரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
தூத்துக்குடி ஜூன் 13 முதல் அரசியல் பயணம் தொடக்கம் கன்னியாகுமரியில் இருந்து பயணம் தொடங்க உள்ளது, டிசம்பரில் பொதுக்குழு நடைபெறும். ஜனவரி முதல் தேர்தல் பரப்புரை தினமும் கூட்டம் நடைபெறும். தேர்தல் முன்பே வரும் என்கிறார்கள் நமக்கு எப்பொழுது வந்தாலும் கவலை இல்லை. நாம் தமிழர் கட்சி 24 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் 20 பெண்கள் 20 ஆண்கள் போட்டியிடுவர். அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இனி வளர முடியாது.
குடித்து செத்தவனுக்கு ரூபாய் 10 லட்சம் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவனுக்கு ஐம்பதாயிரம் எப்படிப்பட்ட ஆட்சி திராவிட மாடலா இவ்வளவு கேவலப்பட்ட மாடலாக உள்ளது குடிச்சு செத்தவனுக்கு குடிக்காதவன் வரிப்பணத்தில் இருந்து காசு கொடுக்கப்படுகிறது பேனா சிலைக்கும் சமாதிக்கும் கணக்கு சொல்ல வேண்டும்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழக மீனவர்கள்களின் வாழ்வாதாரத்தை காக்க கட்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கையில் இந்து கோவில்கள்களை இடித்துவிட்டு புத்தர் கோவில் கட்டப்படுகிறது. திபத்தில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை கொடுத்துள்ளீர்கள். எங்களுக்கு ஏன் குடியுரிமை தர மறுக்கிறாய். இனத்தின் விடுதலை ஒன்று தான் எங்களின் இலகக்கு. விசராயம் குடித்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
குடிச்சு செய்தவனுக்கு குடிக்காத வன் கட்டிய வரிப்பணத்தில் கொடுப்தற்கு நீங்கள் யார்? மக்களின் நலம் சார்ந்து தான் நாம் தமிழர் கட்சியினர் இருக்கின்றனர். தமிழர்களுக்கு நல்லது கெட்டது எது நடக்கவேண்டும் ஆனாலும் தமிழகத்தில் தான் தொடங்கும். கண்முன்னே நமது வளங்கள் திருடுபோகிறது அதை நாம் தடுக்க முடியவில்லை.
நீட் தேர்வு கொண்டு வந்து காங்கிரஸ் தான் திமுக ஆதரவு அளித்தனர். இவர்கள் வளர்க்கின்றனர். பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நிதி இல்லை என்று சொல்கின்றனர். ஆனால் பேனா விற்க்கும், சமாதிக்கும் எங்கிருந்து நிதி வருகிறது. பாஜக விற்க்கு திடீரென ஈழ தமிழர்கள் மீது பாசம் வருகிறது. கேரளா மீனவர்கள் எல்லை தாண்டி போகிறார்கள். அவர்களை இலங்கை தொடாது. இலங்கைக்கு தமிழன் என்ற இனம் தான் பிரச்சினை.
ஜனவரியில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்குவோம் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments