வாக்கர் அசோசியேசன் ஆலோசனைக் கூட்டம்!!!
கோவை செல்வ சிந்தாமணி குளம் வாக்கர் அசோசியேசன் ந நிர்வாகிகளின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்று 17 5 2003 புதன் கிழமை காலை 8 மணிக்கு செல்வ சிந்தாமணி குளத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிஎஸ் ரங்கராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பிஎஸ் ரங்கராஜன், கண்மணி பாபு, தீபக் ராஜா, சி என் ஜெகநாதன், விஜயலட்சுமி,சீதாலட்சுமி, ஹனீப் பாய்,ராஜன், சுரேஷ், ராதாகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் . இந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
(1) நீலம் மெடிக்கல் சென்டர் மற்றும் செல்வ சிந்தாமணி குளம் வாக்கர் அசோசியேசன் இணைந்து மருத்துவ முகாம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
(2) கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு கமிட்டி கூட்டத்திற்கும் மற்றும் எந்த விதமான ஆலோசனைகளையும் சொல்லாத கலந்து கொள்ளாத பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(3)புதிய உறுப்பினர்கள் விண்ணப்பங்கள் வழங்கி உறுப்பினர்கள் சேர்த்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(4) செல்வ சிந்தாமணி குளம் நடைப்பயிற்சி பகுதிக்கு தேவைப்படும் வசதிகள் ஏற்படுத்தித் தரவும் குறைகளை நிவர்த்தி செய்து தரவும் கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு புகார் மணி அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
(5)இந்த கூட்டத்தில் புதிய கமிட்டி உறுப்பினர்களாக எஸ்பி வெங்கட், எஸ் ராஜா, சுந்தர், தேர்வு செய்யப்பட்டனர்.
நாளை வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments