கோவை மண்டல கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!! தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை!!

கொஜீனா எனும் கோவை மண்டல கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கம் கொஜீனாவின் 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா காந்திபுரம் தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதில் புதிய நிர்வாகிகளாக பொறியாளர்கள் ராஜதுரை தலைவராகவும், செயலாளராக தாமோதரசாமி, பொருளாளராக சோமசுந்தரம் மற்றும் துணை தலைவராக மரிய ஆரோக்கியராஸ் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக பொறியாளர் பிரபாகரன் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கௌரவ அழைப்பாளர்களாக உடனடி முன்னாள் தலைவர் ஜெயவேல் பொருளாளர் பழனிசாமி மற்றும் வெற்றி செல்வன் சென்னை மெட்ரோ பொறியாளர் சங்கத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உலாவிற்கான ஏற்பாடுகளை காவேரி பைப்ஸ் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் மற்றும் ஓம் முருகா நிறுவனத்தின் இயக்குனர் நித்தியானந்தம் ஆகியோர் செய்து இருந்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments