சாலக்குடி சாலையில் சண்டையிட்டுக் கொண்ட யானைகள்!! போக்குவரத்து பாதிப்பு!!!

 

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அடுத்துள்ள கேரளா செல்லும் அதரப்பள்ளி மழக்கப்பாறை செல்லும் சாலையில் வெற்றிலை காடு பகுதியில் இரண்டு ஆண் காட்டு யானைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டன இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதனால் வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.  சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது பின்பு கேரளா மாநில எல்லை பாதுகாவலர் யானையை வனப்பகுதிக்குள் துரத்தியதால் மீண்டும் வாகனங்கள் இயக்கப்பட்டது வாகன ஓட்டிகளுக்கு கவனமாக செல்ல வேண்டும் என்று கேரளா மாநில வனத்துறை எச்சரிக்கை அளித்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments