உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்கம் 1000 ற்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கியது!!

-MMH

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட தலைமை  தொண்டரணி சார்பாக பொள்ளாச்சி, கிணத்துகடவு, வால்பாறை, உள்ளிட்ட தொகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம்  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை மதிய உணவு வழங்க தளபதி விஜய் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கம் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி இருந்தார்.

இதன் படி  விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட தலைமை தொண்டரணி  சார்பாக பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட போத்தனூர், வெள்ளலூர், ஏலூர், மதுக்கரை மார்க்கெட், பொள்ளாச்சி, கிணத்துகடவு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட தலைமை தொண்டரணி தலைவர் கோவை விக்கி தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

பிரியாணி, மற்றும் வடை பாயாசத்துடன் சைவ உணவு என 1000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இத்திட்டத்தில் உணவு அருந்தினர். இந்நிகழ்ச்சியில், வைரமுத்து, அருண்பாண்டியன், பரத்,வி.கே.ஆர்.வினோத், பாலா, விஜயராஜ், மதுக்கரை வினோத், மதுக்கரை சிலம்பரசன், விஜய் சாமு, பிரகாஷ், தனபால், சிலம்பரசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments