பட்டன் மொபைல் போன் தயாரிப்பாளரான ஜே மேக்ஸ் நிறுவனம் தனது புதிய அக்சரீஸ்களை கோவையில் அறிமுகப்படுத்தியது!!

 -MMH

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் செயல்பட்டு வரும் ஜே மேக்ஸ் மொபைல் நிறுவனம் குறைந்த விலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்  புதிய கீ பேட்  மொபைல் போன்களை விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் தனது விற்பனை சேவையை துவங்கி ஒரு வருடம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, ,ஜே மேக்ஸ் நிறுவனம் தனது புதிய  மொபைல் அக்சரீஸ் அறிமுக விழாவை கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடத்தியது. 

இதில் ஜே மேக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் ஆனந்த்யா கோஸ்,தலைமை செயல் அதிகாரி கினிஷ் மாகோ,தேசிய விற்பனை மேலாளர் ராஜேஷ் சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.ஜே மேக்ஸ் மொபைல் நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாகவும், தற்போது இந்திய அளவில் விற்பனையை விரிவு படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

குறைந்த விலையில் தரமான மொபைல் போன்களை வாடிக்கையாளர் களுக்கு  கொண்டு சேர்ப்பதை முக்கிய குறிக்கோளாக பார்ப்பதாகவும் தெரிவித்தனர். தற்போது ஜே மேக்ஸ் இன் புதிய வரவாக ஸ்மார்ட் வாட்ச்,நெக் பேண்ட்,பவர் பேங்க்,இயர் பட்ஸ்,போன்ற அக்சரீஸ்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.ஜே மேக்ஸ் மொபைல் மற்றும் அக்சரீஸ் பொருட்கள் ஆன் லைன் தளங்களிலும் கிடைப்பதாகவும்,எளிமையாக அனைத்து தரப்பினரும் கையாளும் வகையில் எங்களது நிறுவனத்தின் மொபைல் போன் இருப்பதாக குறிப்பிட்டனர்.இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தமிழக மண்டல மேலாளர்கள் மருதாசலம்,பிரபு,ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments