கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் - டீம் ஸீ சக்தி மீண்டும் சரவதேச எரிசக்தி படகு சவாலில் பங்கேற்கிறது.

 -MMH

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் - டீம் ஸீ சக்தி மீண்டும் சரவதேச எரிசக்தி படகு சவாலில் பங்கேற்கிறது!!

  ஐரோப்பாவின் மொனாக்கோ எனர்ஜி படகு சவால் (MEBC) 2023க்கு தகுதி பெற்ற ஒரே இந்திய குமரகுரு வளாகத்தில் அணியான குமரகுருவை சேர்ந்த 10 மாணவர்களைக் கொண்ட குழு நாட்டிலேயே முதல் முறையாக ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் YALI 2.0 என்ற படகை வடிவமைத்துள்ளனர்.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு குமரகுரு கல்லூரியில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் கிரண், MEBC ஆனது புகழ்பெற்ற Yacht Club De Monaco (YCM) ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இது கடல்சார் துறையில் மின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் சுற்றுசூழலை மாசுபடுத்தாத மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் படகுகளை உருவாக்க மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

டீம் ஸீ சக்தி என்ற 10 பேர் கொண்ட மாணவர்கள் குழு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சர்வதேச சவாலுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடத்தின் கற்றல் மூலம் இம்முறை அணி மிகவும் வலுவாக உருவெடுத்துள்ளது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த படகு ஹைட்ரஜன் எரிபொருள் கலத்தால் இயக்கப்படுகிறது. 

புகழ்பெற்ற Yacht Club De Monaco (YCM) ஆல் நடத்தப்படும் MEBC 2023 இந்த ஆண்டு ஜூலையில் நடக்க உள்ளது.  இதில் TSS அணியும் ஒன்றாகும்.


இந்தக் TSS குழு, பேட்டரி மற்றும் சோலார் பேனல் ஆகியவற்றை சக்தி ஆதாரங்களாகக் கொண்டு "யாலி" என்ற இந்தியாவின் முதல் ஆற்றல் படகை உருவாக்கியது.

இந்த ஆண்டு மீண்டும் TSS, MEBC க்கு தகுதி பெற்றுள்ளது. கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்ட அதன் காக்பிட் உடன் YALI 2.0  8.4kWh லித்தியம் அயன் பேட்டரியின் முன்-செட் முதன்மை ஆற்றல் மூலம் 2kW எரிபொருள் செல் மற்றும் 400W இன் இரண்டாம் மூல சோலார் பேனல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

-சீனி, போத்தனூர்.


Comments