கொங்கு பகுதிகளை முக்கிய சுற்றுலா பகுதியாக கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படும் - கோவை டிராவல் ஏஜெண்ட் சங்கம்!

 -MMH

கொங்கு பகுதிகளை முக்கிய சுற்றுலா பகுதியாக கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படும் - கோவை டிராவல் ஏஜெண்ட் சங்கம்.

  கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை முக்கிய சுற்றுலா பகுதிகளாக கொண்டு வர கோவை டிராவல் ஏஜெண்ட் சங்கம் சார்பில் முயற்சிகள் எடுக்கப்படும் என அதன் புதிய தலைவராக பொறுப்பேற்ற K. பாரதி இன்று தெரிவித்தார். கோவை டிராவல் ஏஜெண்ட் சங்கத்தின் புது நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்வு இன்று அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


ஜெய் சன் டூரிசம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் K. பாரதி தலைமையிலான புது நிர்வாகிகள் குழு இன்று பொறுப்பேற்றுக்கொண்டது. நிகழ்ச்சியில், இந்திய தொழில் வர்த்தக சபை - கோவையின் தலைவர் ஶ்ரீரமுலு சிறப்பு விருந்தினராகவும், கொடிசியா தலைவர் திருஞானம் கௌரவ விருந்தினராகவும் மற்றும் கோவை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டனர். 

புதிதாக தலைவராக பொறுப்பேற்று கொண்ட K.பாரதி பேசுகையில்:-
கொங்கு பகுதியை சர்வதேச சுற்றுலா பகுதியாக பலப்படுத்தவும், குறிப்பாக கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை ( வால்பாறை, பரளிக்காடு, வெள்ளியங்கிரி) முக்கிய சுற்றுலா பகுதிகளாக கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும்.அதே போல 2015ல் இந்த சங்கத்தை துவங்கும்போது 15 உறுப்பினர்களாக இருந்தது தற்போது 70 ஆக மாறியுள்ளது. இதை அடுத்த 2 ஆண்டுகளில் அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

-சீனி, போத்தனூர்.

Comments