இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் ஆசிரியர் திருமதி இந்திரா அவர்களுக்கு சிறந்த சமூக சேவை விருது!!!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் 9வது வார்டு பூதப்பாண்டி அருகே துவரங்காட்டில் புத்தக திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் ஆசிரியர் திருமதி இந்திரா அவர்களுக்கு சிறந்த சமூக சேவை விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
துவரங்காட்டில் டியூசன் சென்டர் நடத்தி வரும் திருமதி இந்திரா ஆசிரியர் அவர்களுக்கு பலவிதமான பயிற்சிகள், விழிப்புணர்வுகள் , தமிழ் நாடு அரசின் இல்லம் தேடி டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த வகுப்புகள் மற்றும் பேச்சுப் பயிற்சி, நூலக பார்வையிடுவது, கலந்துரையாடல், தலைவர்களின் வரலாற்றைக் பயிற்றுவித்தல், பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, மது போதைபொருளின் விளைவு அதைப் பற்றி விழிப்புணர்வு நாடகம் ஆகியவை செய்து வருகிறார் திருமதி இந்திரா ஆசிரியர் அவர்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments