அம்பாள் ஆட்டோ ஷோரூமில் மாருதி சுசூகியின் புதிய ஃபராங்க்ஸ் கார் அறிமுகம்!!

-MMH

அவிநாசி சாலையில் உள்ள அம்பாள் ஆட்டோ - மாருதி சுசூகி நெக்சா ஷோரூமில் மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய மாடல் காரான ஃபராங்க்ஸ் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் விஜய் டி.வி.யின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞர் குரேஷி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த ஃபராங்க்ஸ் காரை அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் அனீஷ் முத்துசாமி, கிளை தலைவர் ராதாகிருஷ்ணன், ஷோரூம் மேலாளர் சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாருதி சுசூகியின் புதிய ஃபராங்க்ஸ் கார், காம்பாக்ட் எஸ்.யு.வி. வகையை சேர்ந்தது. 5 இருக்கைகள் கொண்ட இந்த காரில் பாதுகாப்புக்காக 6 ஏர் பேக்குகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 

பயணிக்கும் அனைவரும் மிக சௌகரியமாக பயணத்தை உணர இதன் இருக்கைகள் உடல் வாகிர்க்கு ஏற்ப அமையும் படி வழங்கப்பட்டுள்ளது.  காரின் ஆடியோ சிஸ்டம் சாப்ட்வேர் துறையில் முன்னணி வகிக்கும் ஆர்கமிஸ் நிறுவனத்தின் உதவியுடன் ஆடியோ அம்சங்கள் மேம்படுத்தபlப்பட்டுள்ளது.

வழக்கமான 1.2 லிட்டர் திறன் கொண்ட என்ஜின் வகையும் உண்டு, அதிநவீன 1 லிட்டர் டர்போ சார்ஜ் வகையிலும் வருகிறது.லிட்டருக்கு 20 கிலோமீட்டர் மயிலேஜ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.மேன்யூவல் மற்றும் ஆட்டோமாடிக் டிரான்ஸ்மிஸன் ஆகிய இரு வகைகளிலும் இந்த கார் வெளிவந்துள்ளது.கருப்பு, சிவப்பு, வெள்ளை, சில்வர், பிரவுன், கிரே என 6 நிறங்களில் வெளிவந்துள்ள இந்த கார் ஏற்கனவே 70க்கும் அதிகமான பேர் புகிங் செய்துள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.

-சீனி, போத்தனூர்.

Comments