பள்ளிக் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் வால்பாறையில் பரபரப்பு!!

-MMH

கோவை மாவட்டம் வால்பாறை ஸ்டேன் மோர் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு  இன்று மதியம் முட்டையுடன் சாம்பார் சாப்பாடு வழங்கப்பட்டது.

click here for the video

இதனை அடுத்து, 3 மணிக்கு மாத்திரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் மதிய உணவு எடுத்துக்கொண்ட ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 25 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து உடனடியாக  வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பள்ளிக் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாட்டின் மேல் சம்பந்தப்பட்டவர்கள்  கவனம் கொள்ளாததால்  குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது போன்று வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

குழந்தைகளுக்கு மதியம் எடுத்துக்கொண்ட  உணவால் பிரச்சனையா அல்லது மதியம் எடுத்துக் கொண்ட மாத்திரையால் பிரச்சனையா என்பது விசாரணையில் தெரியவரும்.

-M.சுரேஷ்குமார்.

Comments