வார்ப்பட துறை தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக செயல்படுவது தொடர்பானபயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது!!

  -MMH

வார்ப்பட துறை தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக செயல்படுவது தொடர்பானபயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது!!

  வார்ப்பட தொழில் துறைக்கு மரபுசாரா மின்சக்தியை சுலபமாக பெற மத்திய மாநில அரசுகள்  வழிவகை செய்ய வேண்டும் என பவுண்டரி தொழிற்சாலை அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவுண்டரி துறையான வார்ப்பட துறை தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக செயல்படுவது மற்றும் நிகர பூஜ்ய பசுமை வாயு உமிழ்வது தொடர்பான பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பவுண்டரி தொழில் அமைப்பினர் மற்றும் இன்ன பிற தொழிற்சாலை அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதில் சமீப காலங்களில் நிகர பூஜ்ய பசுமை உமிழ்வை வரும் ஆண்டுகளில் தமிழக அளவில் சாதிப்பதில் உள்ள சவால்களை குறித்து தொழில் அமைப்பினர் தங்கள. கருத்துக்களை தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து பவுண்டரி சார்ந்த இன்ஸ்ட்டியூட் ஆப் பவுண்டரிமென் துணை தலைவர் செல்லப்பன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர்,வார்ப்பட தொழில் சார்ந்த துறை அதிக மின்சக்தியை பயன்பாட்டில் கொண்டுள்ளதால் மாநிலம் நிகர பூஜ்ய பசுமை இல்ல வாயு உமிழ்வு இலக்கை எட்டுவது கடினமாகிறது. இதனை சரி செய்ய வார்ப்பட தொழில் துறைக்கு மறபுசாரர் மின்சக்தியை சுலபமாக பெற மத்திய மாநில அரசாங்கம் வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் ஏற்றுமதி துறையில் இயங்கி வரும் வார்ப்பட தொழில் நிறுவனங்களுக்கு பசுமை தீர்வை எட்ட அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக ஏற்றுமதி துறையிலுள்ள வார்ப்பட நிருவனங்கள் தொழில் போட்டிகளை சமாளித்து முன்னேற மின்மயமாக்குதலையும் மலிவு விலையில் மரபுசாரா மின்சக்தி பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டியுள்ளது என அவர் கூறினார்.

-சீனி, போத்தனூர்.





Comments