மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத் தீ!!

  -MMH

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்  தீ!!

  கோவையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயை, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் ஆலாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நாதேகவுண்டன்புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட இடங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. 

காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், கொழுந்துவிட்டு எரிவதால் தீயை அணைப்பதில் வனத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

தீ வேகமாக வனத்தில் பரவி எரிந்ததால், ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க வனத்துறையினர் முடிவு செய்து, மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர். 

மாவட்ட கலெக்டரின் முயற்சியின்பேரில் சூலூரில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரின் மூலம் தீயை அணைக்க அனுமதி பெறப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன்படி நேற்று காலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் தீ பரவியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு வந்தது. பின்னர் மலைக்கு பின்புறம் உள்ள மலம்புழா அணையில் இருந்து ரப்பர் தொட்டியில் தண்ணீரை எடுத்து வந்து, ஹெலிகாப்டர் மூலம் தீ எரியும் வனப்பகுதியில் ஊற்றியது. பலமுறை ஹெலிகாப்டரில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி காட்டுத்தீயை அணைக்கும் பணி நடந்தது. இதனால் தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 90 சதவீதம் தீ அணைக்கப்பட்டு விட்டது. தற்போது இருட்டுப்பள்ளம், மதுக்கரை, மங்கலம்பாளையம் வனச்சரகம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் காட்டுத்தீயின் தாக்கம் அதிகம் உள்ளது. இதுவரை சுமார் 15 ஹெக்டேர் செடிகள் எரிந்துள்ளன. ஹெலிகாப்டர் உதவியுடன் 6 முறை தீயை அணைக்கும் பணி நடந்தது. ஒவ்வொரு முறையும் 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது  என்று மாவட்ட வனத்துறை அதிகாரி ஜெயராஜ் கூறினார்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments