ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி கிரிஷ் விருதுகள்!!

 -MMH

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் கிரிஷ் விருதுகள் -2023 வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இக்கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி இவ் விருது வழங்கும்  விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் வெவ்வேறு  துறைகளில் சிறப்பான சமூகப் பங்களிப்பினை  வழங்கிய 25 நபர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கோவை சாந்தி ஆசிரமத்தின் தலைவர் டாக்டர். கேஸிவினோ அறம்   சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இவருடன் இக்கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி  கே .சுந்தரராமன், நிதித்துறையின் பொது மேலாளர்  S.லக்ஷ்மிபதி,  இயக்குனர் ம .பிருதிவி ராஜன் மற்றும் கல்லூரியின்  முதல்வர் ஆர்.ஜெகஜீவன் விருதுகளை உடன் வழங்கினார்கள்.

இந்த விருதுகளைப் பெற்றவர்களை இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, அறங்காவலர் கே.ஆதித்யா ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள். இக் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெகஜீவன் வரவேற்று உரை நிகழ்த்தினார். விழாவிற்கு முதனமை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன் தலைமை வகித்து தலைமையுரை ஆற்றினார். கல்லூரி துணை முதல்வர் ஆர்.விஜயசாமுண்டேஸ்வரி நன்றியுரையாற்றினார். 

பேராசிரியர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments