கோவை சரவணம்பட்டி பி பி ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது!!
கோவை சரவணம்பட்டி பி பி ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பி பி ஜி கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் L. P. தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில்,. பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை அறங்காவலர் அக்ஷய் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் முத்துமணி கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்து அனைவரையும் வரவேற்றார்.. விழாவில் சிறப்பு விருந்தினராக அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். பாரதி ஹரி ஷங்கர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக விழாவில் ,கல்லூரியின் தலைவர் டாக்டர்.
தங்கவேலு பேசுகையி்ல்,கல்வி பயிலுல் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நற்பெயரை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கூறிய அவர்,வரும் காலங்களில் மாணவர்கள் அமைப்பு குழுவை உருவாக்கி, ஒவ்வொரு வருடமும் கல்லூரிக்கு வந்து மாணவர்கள் மற்றும் ,பேராசிரியர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்..
இதனால் எதிர்காலத்தில் ஆரோக்கியமான தலைமுறை உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார். நிகழ்ச்சியில் பி பி ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர். ஜெயபாலகிருஷ்ணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்,மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments