கோவை குனியமுத்தூர் அருகே சட்டவிரோத புகையிலை பொருட்கள் விற்பனையால் ஒருவர் கைது!!

 

போதைபொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களின் பயன்பாட்டினால் சீரழிந்து வரும் இளைஞர் சமுதாயத்தை மீட்டெடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புகையிலை குட்கா போன்ற பொருட்களை கடைகளில் வைத்து வியாபாரம் செய்பவர்களின் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை, குனியமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர், மணிகண்டன், இவருக்கு நேற்று குனியமுத்தூர் புல்லுக்காடு பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட பொழுது அங்கு, அதே பகுதியை சேர்ந்த, 38 வயதான பூங்கொடி என்பவர் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இவரிடம் இருந்து 78 புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments