ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை சாமானிய மக்களை சென்றடைய தனி பிரிவு துவங்க வேண்டும் என கோரிக்கை!!

ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை சாமானிய மக்களை சென்றடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தனி பிரிவு துவங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கோவையில் ஹோமியோபதி மருத்துவ சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் இந்திய ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது.கோவையில் முதன் முறையாக நடைபெற்ற இதில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாநாட்டில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் ஓமியோபதி மருத்துவத்தின் பயன்கள் குறித்தும் குறிப்பாக,புற்று நோய் சிகிச்சையில் ஓமியோபதி மருத்துவத்தின் அணுகுமுறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும், ஓமியோபதி மருத்துவர்கள் பேசினர். 

முன்னதாக ஓமியோபதி மருத்துவ சங்கத்தின் கூட்டமைப்பினர்  செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது தற்போது அலோபதி மருத்துவத்திற்கு அடுத்தபடியாக ஓமியோபதி மருத்துவத்தை பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்துவதாகவும், 

ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை சாமானிய மக்களை சென்றடையும் வகையில் மத்திய, மாநில அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு  ஹோமியோபதி சிகிச்சைக்கு என தனி பிரிவு அமைக்க முன் வரவேண்டும் என தெரிவித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments