போதைப்பொருள் ஏற்படுத்தும் தீமைகள்- விழிப்புணர்வு ஏற்படுத்தும் எஸ்பி!!
போதைப்பொருள் ஏற்படுத்தும் தீமைகள்- விழிப்புணர்வு ஏற்படுத்தும் எஸ்பி!!
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்கைக்குள் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தின் சார்பில் கற்பகம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ. கா. ப. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் ஏற்படுத்தும் தீமைகள் பற்றியும் அவர்கள் தனது காவல்துறையில் கடந்து வந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு மாணவர்களுடைய கருத்துக்களை கேட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் மாணவர்களின் நலனுக்காக Students Anti Drug Awareness Club -என்ற குழுவை துவக்கி வைத்து அதற்கான போஸ்டரையும் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கற்பகம் பல்கலைக்கழகத்தில் பயிலும் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இதுபோன்று வரும் காலங்களிலும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இது போன்ற போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments