கோவையில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க ஏற்பாடு!!
கோவையில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க ஏற்பாடு!!
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் டாடா பவர் நிறுவன மும்பை விற்பனை தலைவர் வீரேந்திர கோயல், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலையில் கோவையில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சாரஜிங் நிலையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
கோவையில் பெருகி வரும் மின்சார வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பல நன்மைகள் ஏற்படுகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சார்ஜிங் நிலையங்களில் டாடா பவர் ஏஸ் சார்ஜ் அப்ளிகேசன் வழியாக சார்ஜிங் நிலையங்களை கண்டறிதல், மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்தல், அதற்கான கட்டணங்களை செலுத்துதல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாநகராட்சியில் சார்ஜிங் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடங்கள் வருமாறு:- ரேஸ்கோர்ஸ் பகுதியில் 4 இடங்கள், அவினாசி சாலையில், வ.உ.சி. பூங்கா பகுதியில் 2 இடங்கள், வாலாங்குளம் பகுதியில் 2 இடங்கள், பெரிய குளம் பகுதியில் ஒரு இடம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் 3 இடங்கள், சரவணம்பட்டியில் ஒரு இடம், புரூக் பீல்டு அருகே மாநகராட்சி வாகன நிறுத்தும் இடம், சிங்காநல்லூரில் ஒரு இடம், அவினாசி சாலை டைடல் பார்க் அருகே ஒரு இடம், காந்திபுரம் கிராஸ்கட்ரோடு பகுதியில் ஒரு இடம், காளப்பட்டி சாலையில் 2 இடங்கள், துடியலூரில் ஒரு இடம் என்று மொத்தம் 20 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
-அருண்குமார் கிணத்துக்கடவு.
Comments