கோவை பிராட்வே மால்: முதல் IMAX ஸ்க்ரீன்... தென்னிந்தியாவில் பார்க்காத அதிசயம்!

 

-MMH

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முன்னிலையில் இருப்பது கோவை. இங்கு ஐடி நிறுவனங்கள் வரிசைகட்டி வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிவித்துள்ள டைடல் பார்க் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது. கோவை பீளமேடு பகுதியில் டைடல் பார்க் வளாகத்தில் எல்காட் நிறுவனத்தில் ஐடி நிறுவனங்களுக்கு புதிய கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு 26 நிறுவனங்கள் வருவதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும், வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


இந்நிலையில் கோவை விமான நிலையம் அருகில் அவிநாசி சாலையை ஒட்டி சிவில் ஏரோட்ரோம் போஸ்ட்டில் இந்திரா நகர் பகுதியில் பிரம்மாண்ட வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகளில் பிராட்வே மெகாபிளக்ஸ் என்ற நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்திற்கு 'Broadway Mall’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கோவைக்கு வரவுள்ள 4வது மால் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கடைகள், திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள், ஹைபர் மார்க்கெட், பேஷன் ரீடெய்ல் கடைகள், ஓட்டல், உணவகங்கள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன.


பிராட்வே சினிமாஸ் என்ற பெயரில் மொத்தம் 9 ஸ்க்ரீன்கள் கொண்ட மெகா திரையரங்கம் அமைகிறது. அதில் ஒரு ஸ்க்ரீன் ’ஐமேக்ஸ்’ (IMAX) என்பது கோவை மக்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆகும். இது தென்னிந்தியாவின் முதல் லேசர் தொழில்நுட்பம் மற்றும் EPIQ தொழில்நுட்பத்துடன் கூடிய ஐமேக்ஸ் திரையரங்கமாக அமையவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டுமே ஒரே ஒரு ஐமேக்ஸ் திரை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் இருக்கிறது.


இதையடுத்து இரண்டாவது ஐமேக்ஸ் திரையரங்கம் கோவையில் அமைகிறது. இந்த திரையரங்குகள் நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கட்டுமானங்கள் உடன் வரவிருப்பது பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிராட்வே சினிமாஸ் வடிவமைப்பை லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஜியோவானி கேஸ்டர் என்பவர் செய்துள்ளார். அடுத்து ‘தி மேக்னஸ்’ என்ற பெயரில் 38 அறைகள் கொண்ட சொகுசு ஓட்டல் அமைகிறது. இதனை பேங்காக் நகரை சேர்ந்த பேரடிஜிம் ஷிப்ட் ஸ்டூடியோ நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதிலும் அதிநவீன அம்சங்கள் கொட்டி கிடக்கின்றன. அடுத்து 15க்கும் மேற்பட்ட டைனிங் வசதி கொண்ட ’ஃபுட் கோர்ட்’. இந்தியா முதல் சர்வதேச அளவில் வரை பலதரப்பட்ட உணவுகளை சுவைத்து பார்க்க அருமையான வாய்ப்பாக அமையும். இதுதவிர நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ளும் வகையில் பிரம்மாண்ட அரங்கு ஒன்று பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை பிராட்வே மாலின் பணிகளை கடந்த ஆண்டே முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பணிகள் முடியவில்லை. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் முழுமை பெற்று திறப்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பிரம்மாண்ட வசதிகள் கொண்ட மால் ஆனது, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களை தொடர்ந்து கோவையில் முதல்முறை இடம்பெறுவதாக பேச்சு அடிபடுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments