காடுகள் தான் இந்த உலகின் உயிர் மூச்சு! - பள்ளியில் விழிப்புணர்வு!!

 
  -MMH

காடுகள் தான் இந்த உலகின் உயிர் மூச்சு! - பள்ளியில் விழிப்புணர்வு!!

  காடு என்பது, ஓர் உயிரியல் சார்ந்த கட்டமைப்பாகும். காடுகள்தான் இந்த உலகத்தின் உயிர் மூச்சாகும் என, உலக வன நாள் விழா கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. ரெட்டியாரூர் என். ஜி. என். ஜி. , மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில், உலக வன நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

பள்ளி உதவித்தலைமையசிரியர் பத்மாவதி தலைமை வகித்தார். ஆனைமலை ஆலம் விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், போடிபாளையம் பசுமைக்குரல் பொது நல அமைப்பு பொறுப்பாளர் மகேந்திரன், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, ஆங்கில ஆசிரியர் கீதா ஆகியோர் வன பாதுகாப்பு குறித்து பேசினர். 

ஆசிரியர்கள் பேசியதாவது: காலநிலையை சீராக வைத்துக்கொள்வதில் காடுகள் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் முன்னோர்கள் காலத்தில் காடுகள் தான் புகலிடமாக இருந்தது. நாளடைவில் நாகரிகம் வளரத்தொடங்கியவுடன் மனிதன் காட்டை அழித்து நிலங்களை பிரித்துக்கொண்டான். ஆனால், இன்னும் காடுகள், வன விலங்குகளுக்குப் புகலிடமாகவே விளங்குகிறது. அதேப்போல மனிதன் வாழ்வதற்குத் தேவையான காற்றினைக் கொடுப்பதில் காடுகளின் பங்கு மிக முக்கியமானது. காடுகள்தான் மனித இனத்தின் வரமாகும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மனிதன் வாழ இன்றியமையாத தண்ணீரை மழை வாயிலாகவும், மண் அரிப்பினைத் தடுப்பது வாயிலாகவும், பழங்களை உணவாக கொடுத்தும், மனிதனுக்கு பல வழிகளில் காடுகள் உதவுகின்றன. காடுகளில் ஊசி இலைக்காடுகள், சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என ஒவ்வொரு தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ப உள்ளன. 

இந்தியாவின் மொத்த காடுகளின் பரப்பு, 6 லட்சத்து 30 ஆயிரம் ச. கி. மீ. , உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 0. 6 சதவிகித காடுகள் அழிக்கப்படுகின்றன. காடு என்பது வெறும் மரங்கள் மட்டுமல்ல, அது ஓர் உயிரியல் சார்ந்த கட்டமைப்பாகும். வனவிலங்குகள் ஊருக்குள் வருவது ஏன் என சிந்தித்துப் பார்த்தால், வனப்பகுதியை அழித்து, அவற்றின் வாழ்வாதாரத்தை நிர்கதியாக்கியதே முக்கிய காரணமாகும். வனங்கள் பெரும்பான்மையாக அழிக்கப்பட்டதே, இன்றைய புவி வெப்ப உயர்வுக்கு காரணமாகும்.

காடுகள்தான் இந்த உலகத்தின் உயிர் மூச்சு. இனி வரும் காலங்களில் மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும் ஆணிவேராக பயன்படும் காடுகளை, அழிவின் பிடியில் இருந்து காப்பது நம் அனைவரின் கடமையாகும். இவ்வாறு, அவர்கள் பேசினர்.                 

வினாடி -- வினா, பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பசுமைக்குரல் அமைப்பின் சார்பில் விதை பென்சில், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments