கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கலைஞன் காலமானார்!!
கோவை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட நகைச்சுவை நாயகன் நல்ல ஒரு கலைஞன் கோவைக்கு பெருமிதம் கொள்ளும் அளவில் கலை உலகத்தில் கால் பதித்த என்றும் அனைவரையும் சிரிக்க வைத்த சிம்மாசனத்தின் நகைச்சுவை கலைஞர் திரு குணா அவர்கள் சற்று முன் உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் காலமானார்.
பட்டி தொட்டி என்று அனைத்து இடங்களிலும் ஊர்களிலும் தனது நகைச்சுவையின் மூலம் அன்றாட அனைத்து மக்களையும் கவலைகளை மறக்கச் செய்து சிரிக்க வைக்கும் நல்ல ஒரு நகைச்சுவை கலைஞர் மேலும் சில திரைப்படங்களிலும் இவர் நடித்து வெளியானது தற்போது சில காலங்களாக உடல் நிலையில் சற்று தோல்வி ஏற்பட்டு இருந்த திரு குணா அவர்கள் இன்று கோவை மருத்துவமனையில் காலமானார் அவருடன் பயணித்த அனைத்து கலைஞர்களும் திரை உலகத்தை சார்ந்த சிறு பெரிய கலைஞர்களும் அவரது இறுதிச் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.
Comments