வால்பாறை பகுதியில் பெய்த கனமழையால் மரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!!!
வால்பாறை பகுதியில் பெய்த கனமழையால் மரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!!!
கோவை மாவட்டம் வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது இந்த மழையினால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.இந்த சூழ்நிலையில் அய்யர் பாடி ஜே இ பங்களோ பகுதியில் காற்று மற்றும் இடியுடன் கனமழை கொட்டியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காற்றின் வேகத்தால் நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த மரம் சாய்ந்து நெடுஞ்சாலையில் விழுந்தது இதனால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது மற்றும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி இருளில் மூழ்கியது. பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே ஜேசிபி இயந்திரத்தை வைத்து மரத்தை அகற்றி விடப்பட்டது பின்பு போக்குவரத்து தடை சீர் செய்யப்பட்டது பின்பு மின் இணைப்பும் சீர் செய்து விநியோகம் செய்யப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.
Comments