கோவை அத்தார் ஜமாத் பள்ளிவாசல் புதிய நிர்வாகி தேர்வு!!

-MMH

கோவையை மையமாக கொண்டுள்ள பழமை வாய்ந்த கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசலின் கீழ் கல்வி நிலையம், வணிக வளாகம் செயல்பட்டு வருவதுடன் சேவை பணிகளையும் செய்து வருகின்றனர். இதனிடையே அத்தார் ஜமாத் பள்ளிவாசலின் 2023- 2025க்கான புதிய அத்தார் ஜமாத் பள்ளிவாசலின்நிர்வாகி தேர்வு நடைபெற்றது.

அத்தார் ஜமாத் மகாசபை தேர்தலில் அத்தாரியா நலம் நாடும்  வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட நபர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் தலைவராக ஆசிரியர் அமானுல்லா, துணைத் தலைவர்கள் சையது உசேன், சாகுல் ஹமீது, செயலாளர் பேராசிரியர் பீர் முகமது, பொருளாளர் பக்கீர் முகமது, முத்தவல்லி ஜாஃபர்அலி, செயற்குழு உறுப்பினர்கள் ஆஷிக் அகமது, முகமது சபீக், முகமது யூசுப், முகம்மது ஷாஜகான், இதயத்துல்லா, முகமது இப்ராஹிம், நவ்ஷாத் அலி, காஜா உசேன், நிஜாமுதீன், ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தல் வெற்றி, வெற்றி பெற செய்த அனைத்து ஜமாத்தார்களும் மகாசபை பெரியோர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும்,இனி வரக்கூடிய இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளத ஜமாத்தார்கள், மகாசபையாளர்கள், கடை வாடகைதாரர்கள்,உள்ளிட்ட அனைவருக்கும் தெரியப்படுத்துவதாக தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

-சீனி, போத்தனூர்.

Comments