கோவை மாநகராட்சியில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்தபடி கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள்!!
கோவை மாநகராட்சியில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்தபடி கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பினர்…
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாநகராட்சியில் 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கையான பட்ஜெட் தாக்கல் சிறப்பு கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகமான விக்டோரியா அரங்கில் நடைபெற்றது.இந்நிலையில் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி மத்திய அரசை கண்டித்து கண்டன கோசம் எழுப்பினர்...இதில் பேசிய மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ராகுல் காந்திக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் மக்கள் ஆதரவு தெரிவித்து வருவதாக கூறிய அவர்,காங்கிரஸ் கட்சி இது தொடர்பான விவகாரத்தில் தொடர்ந்து போராட உள்ளதாக தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.
Comments