ஒட்டப்பிடாரம் தொகுதியை பேரூராட்சியாக அறிவிக்க கோரிக்கை!!
ஓட்டப்பிடாரம் தொகுதியில் தொழில் நிறுவனங்கள் அமையவும், வேலைவாய்ப்பு பெருகவும் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தை பேரூராட்சிகளை அறிவிக்க வேண்டும் என தொகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்ட மன்ற இடைத்தேர்தலில் 2019 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தை பேரூராட்சியாக. தரம் உயர்த்தபடும் என வாக்குறுதிகளை அளித்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிக கிராமங்களைக் கொண்ட தமிழகத்தின்2-வது பெரிய தொகுதியாக ஓட்டப்பிடாரம் தொகுதி உள்ளது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் 61 கிராம ஊராட்சிகள், 173 குக்கிராமங்களுடன் தமிழகத்தின் 2-வது பெரிய ஊராட்சி ஒன்றியமாக உள்ளது.
பெரிய ஊராட்சி ஒன்றியம் என்றாலும், பெயர் சொல்லும் அளவுக்கு தொழிற்சாலைகள் இல்லை. போக்குவரத்து காவலர் , பேருந்து நிலையம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால் பெரிய நிறுவனங்கள் இப்பகுதியில் தொழில் தொடங்க முன்வருவது கிடையாது. இதன் காரணமாக விவசாயம் இல்லாத காலங்களில் இங்குள்ள மக்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி,கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினக்கூலியாக சென்று வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், பசுவந்தனை, குறுக்குச்சாலை மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மலர் சாகுபடி மற்றும் மானாவாரி பயிர்கள் அதிகமாக உள்ளது. இங்கிருந்து தூத்துக்குடி, கோவில்பட்டி திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதி சந்தைகளுக்கும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள வாசனை திரவியங்கள்தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இப்பகுதியிலேயே வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் அமைத்தால், வேலைவாய்ப்பு பெருகும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, இத்தொகுதி மக்களின் வேலைவாய்ப்பு, வருவாய் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், மற்றும் வியாவரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments