ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புத்தாடை வழங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாட்டம்!!

-MMH 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக , பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 C,நேரு நகர் லயன்ஸ் சங்கம்,கலாம் மக்கள் அறக்கட்டளை, உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புத்தாடை வழங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாடு முழுவதும் உள்ள தமிழர்கள்  விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்..இந்நிலையில் , பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 C,நேரு நகர் லயன்ஸ் சங்கம்,கலாம் மக்கள் அறக்கட்டளை,NCIA பவுண்டேஷன்,FAIRA,F.O.P அறக்கட்டளை மற்றும் என் நிலம் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடும் பொங்கல் பண்டிகை விழா  கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.

தொடர்ந்து சமூக நலப்பணிகளை முன்னின்று நடத்தி வரும், லயன்  செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக,கோவை மாநகர காவல்துறை ஆயுதப்படை பிரிவு  உதவி ஆணையாளர் சேகர்,தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரபிக்,முல்லை மண்டல தலைவர் அர்ஜுன், NCIA பவுண்டேஷன் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புத்தாடைகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் துணை தலைவர் பூபேஷ்,இளைஞர் அணி செயலாளர் புகழேந்தி,செயலாளர் பாலசுப்பிரமணியம், ஜீவ சாந்தி அறக்கட்டளை தலைவர் சலீம், கோவை மாநகர காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ராஜன் பாபு,சிவபாலன், ஆக்டிவ் செகரட்டரி  மோகன்ராஜ், பொருளாளர் சோபன் குமார், கிருஷ்ணமூர்த்தி,வெங்கடேஷ், கிரீஸ், சக்திவேல், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments