கோவில்பட்டி தினசரி சந்தை இடமாற்றம்!! புதிய பேருந்து நிலையம் அருகில்!!!

கோவில்பட்டியில் தினசரி சந்தை வருகிற 26ம் தேதி முதல்  புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பழைய கடை கட்டிடங்களை இடித்துவிட்டு ரூ.687/-இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கடை கட்டிடங்கள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசாணை எண்.(4D)23 நாள்:01.12.2022 மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


அதன் பேரில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் தினசரி சந்தையில் பழைய கடையை இடித்துவிட்டு புதியதாக கடை கட்டிடங்கள் கட்டுவதற்கு 02.01.2023 அன்று ஒப்பந்ததாரருக்கு பணி உத்திரவு வழங்கப்பட்டு பணி மேற்கொள்ள தயார் நிலையில் இருந்து வருகிறது. 

மேற்படி புதிய சந்தையின் கட்டுமான பணி முடிவடையும் வரையில் தற்காலிக சந்தை கோவில்பட்டி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் 26.01.2023 முதல் செயல்படும் என பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments