கோவை சுகுணா ரிப் வி பள்ளியில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது…!!

 

     -MMH 

கோவை சுகுணா ரிப் வி பள்ளியில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது…!!

   கோவை சுகுணா ரிப் வி பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில்,கிராமிய சூழலில், வெள்ளை குதிரைகள் நடுவே வீற்றிருந்த காவல் தெய்வம் அய்யனார் சிலை முன்பாக பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தற்போது பொங்கல் பண்டிகை கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும், குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரிகின்றது. அந்த வகையில் கோவை காந்திபுரம் டாக்டர்ஸ் காலனி  பகுதியில் உள்ள சுகுணா ரிப் வி பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

கடந்த இரண்டு வருட கொரோனா இடைவெளிக்கு பிறகு  பொங்கல் பண்டிகை நிகழ்ச்சி நடைபெறுவதால்,பள்ளி மாணவ,மாணவிகள் உற்சாகத்துடன் தமிழக பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர். பள்ளியின் நிர்வாக இயக்குனர் லட்சுமி நாராயணசாமி, தாளாளார் சுகுணா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சுகுணா குழுமங்களின் நிர்வாக இயக்குனர் அனீஷ் குமார் மற்றும் சாந்தினி அனீஷ் குமார்,பள்ளியின் இயக்குனர் மற்றும் முதல்வர் ஆண்டனி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிராமிய சூழலில் பொங்கல் விழாவை கொண்டாடும் விதமாக பள்ளி வளாகத்தில், வெள்ளை குதிரைகள் நடுவே காவல் தெய்வம் அய்யனார் சிலை வீற்றிருக்க அதனை சுற்றி கிராமிய சூழலில் அலங்காரங்கள் செய்யப்பட்டு, தத்ரூபமாக காட்சியளிக்கப்பட்டது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 விழாவில்,மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன், தமிழர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான ஊர்ந்து செல்லும் விளையாட்டு கொல கொலயா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணி ஊத்தி, நொண்டி ஆட்டம் கண்ணாமூச்சி, பூப்பந்து,உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன..விழாவில், மழலையர் மற்றும் துவக்கபள்ளி நிர்வாகி லீனா,அலுவலக நிர்வாகி தயா,ஒருங்கிணைப்பாளர்கள் பிரகாஷ்,சுமித்ரா உட்பட ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

- சீனி,போத்தனூர்.

Comments