ஒட்டப்பிடாரம் பொதுக்கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் பொதுக்கூட்டம் முன்னாள் எம்எல்ஏ மோகன் தலைமையில் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பேசுகையில்: இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தியாகம் செய்து இன்ணுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு இயக்கம் ஒரு கட்சி ஒரே சின்னத்தை 234 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனியாக மக்களை மட்டும் சந்தித்து ஆட்சி அமைக்கக்கூடிய வரலாற்றை உருவாக்கி 14 ஆண்டு காலம் நல்லாட்சி நடத்தி மக்களின் மனங்களிலே மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற கொள்கையை பிடிப்போடு வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ஒட்டப்பிடாரம் தொகுதி என்றைக்கு அசைக்க முடியாத எக்கு கோட்டை. என்றைக்கு தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக ஒட்டப்பிடாரம் மாறும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நிம்மதியாக இல்லை. இந்த ஆட்சி போனால் தான் எங்களுக்கு விடியல் என மக்கள் புலம்பும் நிலையில் உள்ளனர்.
இந்த ஆட்சி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. போன ஆட்சி காலத்தில் ஐந்து வருடம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆண்ட போதும் தற்போது திமுக ஆட்சி வந்த பின்பும் தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் மக்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தார்கள்.
என்று உணர்கிறார்கள். நிழலின் அருமை வெயில் வந்த பின்பு தான் தெரியும். ஒரு தொண்டன் கூட முதலமைச்சராக முடியும் என ஒரு இயக்கம் உண்டு என்றால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான்.
திமுகவில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அதன் பின் யார் முதலமைச்சராக வர முடிந்தது முதலில் அவர் மகன் ஸ்டாலின், மகள் கனிமொழி, பேரன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர், இன்னொரு மருமகன் மத்திய அமைச்சர் இப்படி குடும்பத்திற்கு பட்டா போடுகிற கட்சி திமுக.
திருவிளையாடல் படத்தில் சொல்வது போல் தமிழும், இலக்கியமும் அதேபோல் பிரிக்க முடியாது திமுகவில் வாரிசு அரசியலையும் திமுகவையும் பரிக்க முடியாத ஒன்று.
தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்கள் கொதித்தால் இந்த ஆட்சி நிலைக்காது, நீடிக்காது இந்த பாவம் ஸ்டாலினை சும்மா விடாது.இன்று ஈரோடு கிழக்குத் தொகுதி எடுத்துக் கொண்டால் முதல் முதலில் போட்டியிட போவதாக அறிவித்த கட்சி அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக நின்றால் ஈரோடு எங்களுக்கு அதிமுகவிற்கு கிடைக்கும் ஈரோட்டில் திமுக நின்றால் திருவோடு தான் கிடைக்கும்.
மகளிர்க்கு மாதம் ஆயிரம் நீட் தேர்வு ரத்து மக்களிடமும் மாணவர்கள் இந்த விடியல் ஆட்சி ஏமாற்றிக் கொண்டு வருவதற்காக வரும் தேர்தலில் மக்கள் நல்ல திர்ப்பை வழங்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மாவட்ட மாணவரணி சின்னத்துரை ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய இளைளுரணி செயலாளர் வீரபாண்டி கோபி என்ற அழகிரி அம்மா பேரவை செயலாளர் கண்ணன் புதியம்புத்தூர் நகர செயலாளர் ஆறுமுகசாமி பாசறை சிவக்குமார் பொதுமக்கள் கழக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments