செல்வபுரம் நடை பயிற்சி நண்பர்களின் ஆலோசனை கூட்டம்!!!

 -MMH

கோவை செல்வ சிந்தாமணி குளம் நடைபயிற்சி நண்பர்கள்  ஆலோசனைக் கூட்டம் நேற்று22.01.23 காலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு  BS ரங்கராஜன், தீபம், ராஜா, வைரம், நாகராஜன்  தலைமை தாங்கினார்கள்.

இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நடை பயிற்சி நண்பர்கள் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

குறிப்பாக ஜெய்சேகர் அவர்களும், வழக்கறிஞர் ராஜேந்நிரன், அவர்களும் ஜெகன், கண்மனி, பாபு, விஜய லட்சுமி, வழங்கிய கருத்துக்கள் மிக பயனுள்ளதாகவும்  அமைந்தது. 

விரைவில் செல்வ சிந்தாமணி குளம் நடைபயிற்சி நண்பர்கள் என்ற அசோஷியன் உருவாக்கம் செய்ய வேண்டும் என முடிவும் செய்யப்பட்டது. அதற்கான நிர்வாகம் விரைவில் அறிவிப்பு  செய்யப்படும் என்று  ஆலோசனை செய்யப்பட்டது.

விரைவில் நடைபாதையை நாமே சுத்தம் செய்து கொள்ளலாம் என அனைவரின் கருத்தையும் ஏற்று கொள்ளப்பட்டது. இறுதியில், நன்றிகூறி  கூட்டம் நிறைவு பெற்றது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments