ஒட்டப்பிடாரம் அருகே ஆன்லைன் ரம்மியால் ஒருவர் தற்கொலை!!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட தெய்வச்செயல்புரம் அருகே ஆன்லைன் ரம்மியில் ரூ.3.5லட்சம் பணத்தை இழந்த இன்ஜினியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகேயுள்ள ராமநாதபுரம், கிழத் தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் மகன் பாலன் (30), பொறியியல் பட்டதாரியான இவர் தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். இவர் சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காண்பித்து வந்துள்ளார்.
கடந்த மாதம் ரூ.3லட்சம் பணத்தை இழந்தார். மேலும் விட்ட பணத்தை பிடிப்பதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தந்தை வங்கி கடன் செலுத்துவதற்காக கொடுத்த ரூ.50ஆயிரம் பணத்தையும் ரம்மி விளையாடி இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த பாலன் நேற்று இரவு தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தட்டப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments