10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம்!!!


-MMH

யாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கிய கோவையை சேர்ந்த ஸ்ரீவித்யா  பைரவிற்கு  கோவையின் சேவைத்தாய் என்ற விருதை வழங்கி நினைவு பரிசு வழங்கி கவுரவித்துள்ளனர். கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியை சேர்ந்தவர் பைரவ் - ஸ்ரீவித்யா தம்பதியினர்,இவர்களுக்கு 4 வயது ஆண் குழந்தை மற்றும் 10 மாத பெண் குழந்தை உள்ளது.  ஸ்ரீவித்யா முதல் குழந்தை பிறந்ததில் இருந்து தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும் என முடிவு செய்து, இது குறித்து தனது கணவர் பைரவிடம்  தெரிவித்துள்ளார். அவரும் ஆர்வம் காட்டியதால், மகப்பேறு மருத்துவர்கள்  உதவியுடன்  தாய்ப்பால் தானம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தனது இரண்டாவது பெண் குழந்தை பிறந்த ஐந்தாவது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்.

இவர் கடந்த 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் இவரது அளப்பறியா சேவையை பாராட்டி ,கோவை பீளமேடு பகுதியில் உள்ள நாகரத்தினம் பள்ளியில் யாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் ஸ்ரீ வித்யாவிற்கு கோவையின் சேவைத்தாய் என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளனர்.இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், டெல்லி சிறப்பு பிரதிநிதி, திரு ஏ கே எஸ் விஜயன்,சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் பேரன் இளைய கட்டபொம்மன் திரு துளசிராமன்,இந்திய தேசிய காங்கிரசின் மாநில அமைப்பாளர் ஞான பிரியா,கோவை மாவட்ட தொழிலாளர் அணி பிரிவு செயலாளர் சுந்தரலிங்கம்,ஸ்ரீவித்யா பைரவ் அவர்களின் பெற்றோர் கண்ணன் கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி போத்தனூர்.

Comments