பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள்! பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்கலாம்!!
கோவை காந்திபுரம் 100 அடி சாலை, 3வது வீதியில் முத்து லேண்ட் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், முத்துவிலாஸ் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், நெல்லை முத்து விலாஸ் ஸ்வீட்ஸ் & குருப்ஸ் மற்றும் தங்க நகை சிறுசேமிப்பு திட்டம் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வந்தது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிறுவனங்கள் மீதும், அதன் இயக்குநர் 49 வயதான பரமசிவம், மற்றும் கிருத்திகா ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் பரமசிவம், என்பவர் கடந்த 2019 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுவரை இந்த நிறுவனங்கள் மீது 2, 026 புகார் மனுக்கள் பெறப்பட்டு குற்றப்பத்திரிக்கை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை கோவை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது, இந்நிலையில், மேற்படி நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் தங்களுடைய அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் மனுவை அளிக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
சி.ராஜேந்திரன்
Comments