அவசரத்தில் செய்யப்பட்டதா?... அலட்சியப் போக்கில் செய்யப்பட்டதா?...
அவசரத்தில் செய்யப்பட்டதா?... அலட்சியப் போக்கில் செய்யப்பட்டதா?...
பொள்ளாச்சியில் இருந்து திருச்சூர் செல்லும் சாலையில் நஞ்சை கவுண்டன்புதூர் என்ற பகுதியின் அருகே பெட்ரோல் பங்க் அருகில் சில தினங்களுக்கு முன்பு சாலையில் கீழே பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீரின் அழுத்தத்தால் சாலை உடைந்து நீர் வீணாக வெளியேறியது.
சாலையைத் தோண்டி குழாயின் அடைப்பை சரி செய்த பின் தோண்டிய குழியை சரி செய்யாமல் மணல்மேடு போன்று ஏற்படுத்தி வைத்துள்ளனர். இந்தப் பகுதி மிகவும் இறக்கமான சாலை பகுதி வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்ற சாலைப் பகுதியும் கூட இதனால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் சரி செய்த பணியை மீண்டும் நல்ல முறையில் சரி செய்திட அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும், விரும்புகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.
Comments