ஆனைமலை பகுதியில் பல்வேறு இடங்களில் நேற்று திடீரென பரவலாக மழை...!!!

 -MMH 

ஆனைமலை தாலுகாவில்  கடந்த சில நாட்களாக, பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிரும் இருந்து வந்த சூழ்நிலையில், நேற்று காலை முதலே வானம்  மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

எனவே வெயிலின் அளவு குறைந்து காணப்பட்டது. மேலும்  இந்தநிலையில் நேற்று இரவு 7.00 மணிக்கு மேல் திடீரென ஆனைமலை மற்றும் அதனை சுற்றிய   பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய துவங்கியது. இதனால், மழைநீர் சாலைகளில் ஓடியது. 

மழை காரணமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் வாகனங்களை ஆங்காங்கே சாலையோரம்  நிறுத்திவிட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். மேலும் குறிப்பாக நேற்று காலை 8:00 மணி முதல் டிசம்பர் 26 ஆம் தேதி திங்கட்கிழமை இன்று காலை 8 மணி வரை நிலவரப்படி வேட்டைக்காரன் புதூர் பிஏபி சுற்றுப்பதிகளில் 10 mm மழையும் ஆழியார் சுற்றுப்பதிகளில் 4mm மழையும், ஆனைமலை தாலுகாவில் 6 mm மழையும் பதிவாகியுள்ளது.

கோயம்புத்தூர் பேரிடர் மேலாண்மை செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Comments