எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம்!!!
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கடம்பூர், கோவில்பட்டி, எட்டயபுரம், பசுவந்தனை ஆகிய பகுதிகளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று எம்ஜிஆரின் திருவுருச்சிலைக்கு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினறுமான கடம்பூர் ராஜூ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது, எம்ஜிஆரின் தீவிர தொண்டரான முன்னாள் அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட பொருளாளர் மலையாண்டி தொடர்ந்து 35 ஆண்டுகளாக எம்ஜிஆரின் திருவுருச்சிலைக்கு முன்பு முடி காணிக்கை செலுத்தி எம்ஜிஆரின் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட குழு ஊராட்சி தலைவி சத்யா, நகர செயலாளர் விஜய பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம், கருப்பசாமி, காந்தி என்ற காமாட்சி, நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரத்தில் எம்ஜிஆர் நினைவு தினம்:
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் நகர அதிமுக சார்பில், நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் நடுவிற்பட்டி அலங்காரி அம்மன் கோவில் தெருவில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், மகளிர் அணி செல்வி சாந்தி, அவைத் தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, சொக்கன், கன்னியப்பன், மோகன், முருகன்,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும் அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசுவந்தனையில் எம்ஜிஆரின் நினைவு :
ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் குறுக்குச்சாலை, பசுவந்தனை உள்ளிட்ட பகுதிகளில் எம்ஜிஆரின் 34 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில், முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ மற்றும் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய தலைவரும், ஓட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றியச்செயலாளருமான காந்தி காமாட்சி ஆகியோர் பசுவந்தனையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments