பாலியல் தொல்லை: தாளாளர் புழல் சிறையில் அடைப்பபு !!
சென்னை: சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி தாளாளர் வினோத், 38, 'கவுன்சிலிங்' என்ற பெயரில் பிளஸ் 2 மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாணவர்கள் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து வினோத் மீது 'போக்சோ' சட்டம், கல்வி நிலையத்தில் தொந்தரவு கொடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அதில் தாளாளர் வினோத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ருக்மாங்கதன்.வ , வட சென்னை.
Comments