தூத்துக்குடியில் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை !!!
தூத்துக்குடியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து நேற்று மாலை தொடங்கி விடிய விடிய பரவலாக மழை பெய்தது.
ஒட்டப்பிடாரம் புதியம்புத்தூர் பசுவந்தனை மணியாச்சி புளியம்பட்டி கோவில்பட்டி வரை விடிய விடிய தொடர் மழை நவம்பர் 4ம் தேதி வரை மழை அறிவிப்பு.
வட இலங்கை கடற்கரையையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி தூத்துக்குடியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. நேற்று மாலை தொடங்கிய மழை, இடி மின்னலுடன் மழை பெய்தது. இரவு முழுவது பரவலாக மழை தொடர்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனா். மாநகரில் தாழ்வான இடங்களிலும், தெருக்களிலும் மழை நீா் தேங்கியது. இதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம் .
Comments