மூணாறில் தெரு நாய்களின் அட்டகாசம் நடவடிக்கை எடுக்குமா அரசு??

 

   -MMH 

  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதி மற்றும் மூணாரை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru


இதனால் சுற்றுலா வரும் பயணிகளும் அங்கே வசிக்கும் மக்களுக்கும் அதிகமான பயமுறுத்தலாக கருதப்படுகிறது. இரவு நேரங்களில் மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் நடந்து செல்லும் பயணிகளை தெருநாய்கள் கடிப்பது வழக்கமாகியுள்ளது.

தெரு நாய்களின் ஊடுருவால் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. பலமுறை தொலைக்காட்சி  ஊடகங்களிலும் செய்தி தாள்களிலும் குறிப்பிட்டும் கூட அரசு இதற்கான சரியான முடிவை எடுக்கவில்லை.

இதனை உடனடியாக பரிசீலனை செய்து அரசுத்துறையானது சரியான தீர்வை சீக்கிரம் காண வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன் மூணார்.

Comments