இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
கோவையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தும் மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி. எஸ். என்.எல் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள் "காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஆர். எஸ். எஸ் கருத்தை திணிக்க வேண்டாம்,தமிழ் மாணவர்களிடையே காவி சிந்தனையை விதைக்க வேண்டாம்,காசிக்கும் தமிழகத்திற்கும் தொடர்பு இல்லை, எனவே ஆர். எஸ். எஸ். கோட்பாட்டை இந்துத்துவா கொள்கை என்ற பெயரில் மாணவர்களிடையே புகுத்த கூடாது, இது போன்ற செயல்களை மத்திய அரசு கைவிட வேண்டும்''. என்று வலியுறுத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments