தூத்துக்குடி - மைசூரு ரயில்களில் எல்எச்பி என்னும் சொகுசு பெட்டிகள் இணைப்பு!!!

தூத்துக்குடி - மைசூரு  ரயில்களில் எல்எச்பி என்னும் சொகுசு பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. எல்எச்பி பெட்டிகளில் உள்ள முக்கிய அம்சங்கள்

ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள எல்எச்பி பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, ஒரு ரயில் பெட்டி 51.7 டன் எடை கொண்டது. அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வசதியுள்ளது. சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜ் போடும் வசதி உட்பட பல்வேறு வசதிகள் இதில் உள்ளன.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வழக்கமாக செல்லும் விரைவு ரயில் பெட்டியில் 72 படுக்கைகள், ஏசி பெட்டியில் 64 படுக்கைகள் இருக்கும். எல்எச்பி பெட்டிகளில் 80 படுக்கைகள், ஏசி பெட்டியில் 72 படுக்கைகள் உள்ளன. ரயில்வேத் துறையில் முக்கிய விரைவு ரயில்களில் எல்எச்பி பெட்டிகள் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகளின் ஏர் கண்டிஷனிங் அமைப்பு அதிக திறன் கொண்டது.

இது தொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "ரயில் எண்.16232 / 16231 மைசூரு - மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ரயில் எண்.16236 / 16235 மைசூரு - தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழக்கமான பெட்டிகள் எல்எச்பி (Linke Hofmann. Busch) பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன. இந்த ரயில் ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர் வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

ரயில் எண்.16232 மைசூரு - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் 25.11.2022 முதல் LHB பெட்டிகளுடன் இயக்கப்படும். ரயில் எண்.16231 மயிலாடுதுறை - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் 26.11.2022 முதல் LHB பெட்டிகளுடன் இயக்கப்படும். ரயில் எண்.16236 மைசூரு - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் 27.11.2022 முதல் LHB பெட்டிகளுடன் இயக்கப்படும்.

ரயில் எண்.16231 தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் 28.11.2022 முதல் LHB பெட்டிகளுடன் இயக்கப்படும். மிக நீண்ட நாட்களாக பொது மக்கள்  கோயம்புத்தூர் இருந்து தூத்துக்குடி  பாசஞ்சர் ரயில்  வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்  விடுமுறை நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் மிகவும் சிரமமாக இருக்கிறது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments