சுற்றுலாத்தலமாக மாறிவரும் சதுரங்கம் பாறை மெட்டு!!

   -MMH 

   கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் அருகே சாந்தாம்பாறை பகுதியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் இடம்தான் இந்த சதுரங்கம் என்று பாறை இந்த இடமானது தமிழ்நாட்டுக்கு சொந்த இடமாக கருதப்படுகிறது.

இங்கிருந்து பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம் மாவட்டத்தை அப்படியே பார்க்க முடியும் மலைகளை சுற்றிலும் பசுமை நிறைந்ததும் அங்கே நிறுவப்பட்ட காற்றாடிகளும் அங்கு உள்ள இயற்கை அமைப்பு கால நிலையும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கிறது.

 தமிழ்நாட்டுக்கு சொந்த இடமாக இருந்தால் கூட அங்கே சென்றடைய கேரளா எல்லைக்குள் சென்று அதன் வழியாகத்தான் செல்ல முடியும் இதன் காரணமாகவே அது சுற்றுலாத்தலமாக மாற்றப்படாமல் இருக்கின்றன.

தேனி மாவட்டத்திலிருந்து போடிநாயக்கனூர் வழியாக நேரடியாக இதற்கு வழி அமைக்கப்படும் என்று பேச்சுக்கள் எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் கேரள அரசின் சார்பாக உடும்பன்சோலை தாலுகா இந்த இடத்தை சுற்றுலா தளமாக மாற்ற பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. தற்பொழுது சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன் மூணார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

Comments