கே.ஜி.ஐ.எஸ்.எல்.தொழில் நுட்ப கல்லூரியில், மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது..!
கோவை சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல்.தொழில் நுட்ப கல்லூரியில் 2022 கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல்.தொழில்நுட்ப கல்லூரியில் ஜெனிசிஸ் 2022 எனும் தலைப்பில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.பொறியியல் துறை இளங்கலை,முதுகலை,மற்றும் எம்.பி.ஏ. துறை 2022 ஆம் கல்வி ஆண்டு மாணவ,மாணவிகளை வரவேற்கும் விதமாக நடைபெற்ற இதில்,கல்லூரியின் நிர்வாக இயக்குனர் அசோக் பக்தவச்சலம் தலைமை தாங்கினார்.கௌரவ அழைப்பாளராக கே.ஜி.மருத்துவமனை தலைவர் மருத்துவர் பக்தவத்சலம் கலந்து கொண்டு மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே பேசினார்.
சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும்,தன்னம்பிக்கை பேச்சாளரும் ஆன மரபின் மைந்தன் முத்தையா கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடையே கலந்துரையாடினார்.அப்போது பேசிய அவர்,கல்லூரியில் படிக்கும் போது மாணவ,மாணவிகள் முழுமையான கவனத்தை செலுத்தினால் மட்டுமே சாதனையாளர்களாக உருவாக முடியும் எனவும்,தாங்கள் விரும்பி எடுத்த கல்வி துறையில் முழுமையான எண்ணத்தில் பயின்றால்,வாழ்வில் வெற்றி பெற முடியும் என பேசினார்.தொடர்ந்து பேசிய கல்லூரியின் நிர்வாக இயக்குனர் அசோக் பக்தவச்சலம், கல்லூரியில் உள்ள வசதிகள்,வேலைவாய்ப்பு பெற மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி குறிப்பிட்டார்.விழாவில் மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள்,கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சீனி,போத்தனூர்.
Comments