இந்தியா - நியூசிலாந்து இடையேயான மோதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது!!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்ட்ய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.
Comments